பெரம்பலூர்: மாவட்டத்திற்கான விஷன் 2030 மற்றும் 5 ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்த கையேடு; அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்!

schedule
2026-03-07 | 01:48h
update
2026-03-07 | 01:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Minister Sivashankar releases a guide on Vision 2030 and 5-year achievement plans for the district!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி தலைமயில், காணொளிக்காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கான விஷன் 2030 மற்றும் 5 ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்த கையேட்டினை வெளியிட்டார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

Advertisement

அட்மா சேர்மன் வீ.ஜெகதீசன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் துரைசாமி, ராஜ்குமார், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், பேரூராட்சித் தலைவர்கள் அரும்பாவூர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சரண்யா குமரன், லப்பைக்குடிக்காடு ஜாகீர் உசேன், பூலாம்பாடி பாக்யலட்சுமி செங்குட்டுவன், குரும்பலூர் சங்கீதா ரமேஷ், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் என்.ராஜேந்திரன், வடக்குமாதவி அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் டாக்டர் கருணாநிதி, டி.சி.பாஸ்கர், திமுக ஒன்றிய செயலளார்கள் வேப்பூர் அழகு.நீலமேகம், மதியழகன், நல்லத்தம்பி, முன்னாள் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பந்தட்டை துணை சேர்மன் ரெங்கராஜ், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி.ஆர். சிவசங்கர் மற்றும்

கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்துறை, ஊரக வளர்ச்சித் துறை, பால் வளத்துறை, கூட்டுறவுத்துறை, வங்கியாளர்கள், நெடுஞ்சாலைத் துறை, மற்றும் தொழில் முனைவோர்கள், என பல தரப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 22:33:16
Privacy-Data & cookie usage: