பெரம்பலூர்: கழுத்தறுத்து கள்ளக்காதலி கொலை: காவல் நிலையத்தில் சரணடைந்த கள்ளக் காதலன்; சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை!

schedule
2026-04-10 | 15:09h
update
2026-04-10 | 15:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mistress Murdered—Throat Slit; Lover Surrenders at Police Station; Police Recover Body and Initiate Investigation!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமம், தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் பெரியசாமி(35), நந்தினி(28), தம்பதியினர். கடந்த 10 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடபெற்ற இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பெரியசாமி உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து புது வேட்டக்குடி கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த நந்தினிக்கு, பெரியசாமியின் உறவினரான கருப்பன் மகன் பச்சமுத்து(33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

Advertisement

நந்தினி பச்சமுத்துவின் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிய வந்ததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனமுடைந்து பச்சமுத்துவின் மனைவி சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் அவமானத்தாலும், புதுவேட்டக்குடி கிராமத்திலிருந்து பெரம்பலூருக்கு இடம் பெயர்ந்த நந்தினி, பெரம்பலூர் பாரதிதாசன் நகர், நான்காவது குறுக்கு தெருவில் வசிக்கும், புவனேந்திரன் என்பவரது மெத்தை வீட்டின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு தங்கி இருந்ததோடு, பெரம்பலூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய நந்தினிக்கும், அவரை சந்திக்க வந்த கள்ளக்காதலன் பச்சமுத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பச்சமுத்து நந்தினியை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று, நடந்ததை கூறி கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெரம்பலூர் நகர போலீசார், இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த நந்தினியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பச்சமுத்துவின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட உடல் சார்ந்த தேடலில் உருவான நந்தினி-பச்சமுத்துவின் கள்ளக்காதலால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் பச்சமுத்துவின் மனைவி சத்யா மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு, அவரது இரண்டு பிள்ளைகளையும் அனாதையாக்கி சென்ற நிலையில், “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற பழமொழிக்கிணங்க தற்போது பச்சமுத்துவால் படுகொலை செய்யப்பட்டு தனது மூன்று பிள்ளைகளையும் அனாதை ஆக்கியுள்ளார் நந்தினி!

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2026 - 20:43:38
Privacy-Data & cookie usage: