திருநங்கைகளுக்கு பெரம்பலூர்எம்.எல்.ஏ பிரபாகரன் ரூ.10 ஆயிரம், நிவாரண பொருட்களை வழங்கினார்.

schedule
2021-05-20 | 16:03h
update
2021-05-20 | 16:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur MLA Prabhakaran donated Rs. 10,000 and relief items to transgender people.


பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் பகுதியில் திருநங்கைகள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வசித்து வரும் திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம். பி. வழங்கிய ரூ.10 ஆயிரம் பணத்தையும் , பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன் திருநங்கைகளுக்கு வழங்கினார். நிவாரணப் பொருட்களை பெற்று கொண்ட திருநங்கைகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா. எம். பி.க்கும் நன்றி தெரிவித்தனர். திருநங்கைகள் தலைவி ராணியம்மாள், மணீஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.04.2026 - 14:35:01
Privacy-Data & cookie usage: