பெரம்பலூர்: ரூ.4.59 கோடி மதிப்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய பணிகளை எம்.எல்.ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்!

schedule
2025-07-01 | 15:12h
update
2025-07-01 | 15:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: MLA Prabhakaran laid the foundation stone for project works worth Rs. 4.59 crore and inaugurated new works!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலங்கை, புது அம்மாபாளையம் உள்ளிட்ட 7 கிராமங்களில் ரூ.4.59 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டப் பணிகளை எம்.எல்.ஏ ம.பிரபாகரன் இன்று தொடங்கி வைத்தார்.

Advertisement

ஆலத்தூர் மேற்கு பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடை மற்றும் நாட்டார்மங்கலம், செட்டிக்குளம் ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.10.19 லட்சம் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மைய கட்டிடத்தை திறந்து வைத்தும், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தன் கீழ் செட்டிக்குளம் முதல் வாழையூர் வரை கீழ் ரூ. 75.81 லட்சம் மதிப்பீட்டிலும், செட்டிக்குளம் முதல் புது அம்மாபாளையம் வரை ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணியையும்,

மாவிலங்கை கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.53 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், புது அம்மாபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டும் பணியினையும் அடிக்கல் நாட்டியும் இன்று தொடங்கி வைத்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.05.2026 - 01:24:50
Privacy-Data & cookie usage: