மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார் பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன்!

schedule
2020-06-06 | 15:36h
update
2020-06-06 | 15:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur MLA R.Tamilselvan provided, Petrol scooters! free of cost to persons with disabilities

Advertisement

பெரம்பலூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 2019- 2020 ஆம் நிதி ஆண்டில் 15 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூ.56.400 வீதம்; ரூ.8 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் வாகனத்திற்கான ஆர்.சி (புக்) அட்டையை வழங்கினார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ந.சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் காமாட்சி, வட்டாட்சியர் பாரதிவளவன், முடநீக்கியல் வல்லுனர் ஜெயராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 23:11:13
Privacy-Data & cookie usage: