Perambalur: MLA Sivasankar expressed his gratitude to the voters of the Kunnam constituency, even amidst the scorching heat of the ‘Agni Nakshatram’ period!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் 3வது முறையாக வெற்றி பெற்ற முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று காலை ஆலத்தூர் ஒன்றியத்தில், ஒன்றிய செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் இன்று நன்றி தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தை போலவே நன்றி தெரிவிப்பதை ஒரு பணியாக என்பதை விட பண்பாக கொண்டு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தொடர்ந்து கிராமம் கிராமாக கொளுத்தும் அக்னி நட்சத்திரம் வெயிலையும் பொருட்படுத்தாமல், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் சென்று மேலஉசேன்நகரம் கிராமத்தில் ஆரம்பித்து, வேப்பமரம், கீழஉசேன்நகரம், அல்லிநகரம், குறிஞ்சிப்பாடி, தொண்டப்பாடி, சடைக்கன்பட்டி, சீத்தாராமபுரம், மங்கலம், கீழமாத்தூர், அழகிரிபாளையம், வரிசைப்பட்டி, தங்கநகரம், மேலமாத்தூர், இலந்தங்குழி, சீராநத்தம், மதுராகுடிக்காடு, ஆதனூர், கொட்டரை, குரும்பாபாளையம், சாத்தனூர், சா.குடிக்காடு, தெற்குமாதவி, நத்தக்காடு, சிறுகன்பூர், வரகுபாடி, மலையப்ப நகர், சமத்துவபுரம் காரை, தெரணி ஆகிய ஊர்களில் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து இன்று நன்றி தெரிவித்தார்.
அப்போது ஆங்காங்கே கட்சியினர் கொடி, தோரணங்கள் பட்டாசுகள் முழங்க வரவேற்பும், பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டும் வரவேற்றனர். ஏராளமான சிறுவர்கள், சிறுமியர்கள் அமைச்சர் சிவசங்கருடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கொளக்காநத்தம் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராகவன், இளைஞரணி துணை அமைப்பாளர் கூடலூர் வ.சுப்பிரமணியன், இலந்தங்குழி முன்னாள் ஊராட்சித் தலைவர் அகிலா ராமசாமி உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் துரை.சிவா ஐயப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.