பெரம்பலூர்: குன்னம் தொகுதியில் ஊர் ஊராக நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ சிவசங்கர்!

schedule
2026-05-20 | 16:21h
update
2026-05-20 | 16:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: MLA Sivasankar expressed his gratitude village by village across the Kunnam constituency.

Advertisement

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து குன்னம் தொகுதியில் உள்ள கோவில்பாளையம் துங்கபுரம் காரைபாடி, வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், வதிஷ்டபுரம், அகரம்சீகூர், கல்லை, வேப்பூர், பரவாய் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்காளர்களை சந்தித்து திமுக-விற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ததுற்கு நன்றி தெரிவித்தார்.

முன்னாள் துரைசாமி, மாவட்ட பொறுப்பாளளர் வீ. ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன், அழகு நீலமேகம், முன்னாள் வேப்பூர் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, ஒகளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கு.க.அன்பழகன், ஆண்டாள் குடியரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.05.2026 - 16:57:46
Privacy-Data & cookie usage: