பெரம்பலூர் : எம் எல் ஏ-வின் சொந்த ஊராட்சியில் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை என பெண்கள் எம்.பி யிடம் முறையீடு!

schedule
2024-08-22 | 20:01h
update
2024-08-22 | 20:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: MLA’s own panchayat has not been supplied with drinking water for 15 days, women appeal to MP!


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரஞ்சன்குடியில் இன்று 15 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.12.87 எட்டு கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட திட்டம் பணிகள் நிறைவடைந்து இன்று பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பணியை பெரம்பலூர் எம்பி அருண் நேரு ரஞ்சன்குடி கிராமத்தில் தொடங்கி வைத்தார் அப்போது அங்கிருந்த பெண்கள் எம் எல் ஏ பிரபாகரன் முன்னிலையில் எம்பி அருண் நேருவிடம் 15 நாட்களாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என முறையிட்டனர். அருண் நேரு உடனே அருகில் இருந்த ஊராட்சித் தலைவரிடம் இது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தொடங்கப்பட்ட திட்டத்தில் உங்களுக்கு தண்ணீர் வினியோகம் இன்று முதல் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அங்கிருந்த பெண்கள் ஓட்டு கேட்கும் போது மட்டும் கும்பிட்டு கும்பிட்டு ஓட்டு கேட்டீங்க.. தண்ணீர் கேட்டால் மட்டும் பதில் சொல்லிட்டு போறீங்க என புலம்பி சென்றனர்
தேவையூர் ஊராட்சி தற்போதைய பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 00:36:50
Privacy-Data & cookie usage: