பெரம்பலூர்: மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி; கலெக்டர் தகவல்!

schedule
2025-06-19 | 10:04h
update
2025-06-19 | 10:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mobile app for senior citizens; Collector information!

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலி (Senior Citizen App) Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்கள் மற்றும் மூத்த குடிமக்கள் குறைகள் தெரிவித்திடவும் இந்த கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இச்செயலியினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 11:36:04
Privacy-Data & cookie usage: