பெரம்பலூர்: டிப்பர் லாரி மோதியதில் பைக்கில் சென்றவர் பலி!

schedule
2026-05-15 | 17:39h
update
2026-05-15 | 17:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Motorcyclist killed after being struck by a tipper lorry!

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் காளியம்மன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (58). இவர் இன்று மாலை 6 மணியளவில் சொந்த வேலை காரணமாக கவுல்பாளையத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி பைக்கில் சென்றார். அப்போது 4 ரோடு அருகே அதே திசையில் பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாரத விதமாக பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த செல்வராஜியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பெரம்பலுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் இன்று மாலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2026 - 18:37:47
Privacy-Data & cookie usage: