பெரம்பலூர்: எம்.பி அருண்நேரு, கலெக்டர் அருண்ராஜ் மாணவர்களுடன் இறகுப்பந்தாட்டம் விளையாடி, முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை தொடங்கி வைத்தனர்!

schedule
2025-08-26 | 16:16h
update
2025-08-26 | 16:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: MP Arun Nehru and Collector Arunraj inaugurated the competition by playing badminton with the students!

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு ஆகியோர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுடன் இறகுப்பந்தாட்டம் விளையாடி தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவ,மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட அளவிலான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை“ விளையாட்டுப் போட்டிகள் இன்று 26.08.2025 முதல் 10.09.2025 வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள https://sdat.tn.gov.in இணையதளம் வாயிலாக பெரம்பலுார் மவாட்டத்தில் 22,140 வீரர்- வீராங்கணைகள் முன்பதிவு செய்துள்ளனர். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்- வீராங்கனைகளுக்கு தனிநபர் மற்றும் குழுப்போட்டிகள் தலா முதல் பரிசு ரூ.3000/- ம், இரண்டாம் பரிசு ரூ.2000/-ம், மூன்றாம் பரிசு ரூ.1000/- வழங்கப்படும். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கடந்த ஆண்டு 17,905 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பாண்டில் அதைவிட கூடுதலாக 22,140 நபர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழுபோட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும், பரிசாக வழங்கப்பட உள்ளது. மற்றும் இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழுபோட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மாநில அளவில் குழுப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையுடன் முதலமைச்சர் கோப்பையும் வழங்கப்படும்.

பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வகுமார், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் பொற்கொடி வாசுதேவன், நகராட்சித் துணைத் தலைவர் ஆதவன், டேக்வோண்டோ பயிற்றுநர் து.பரணிதேவி மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு, வீரர்கள், வீராங்கனைகள், தனியார் மற்றும் அரசு உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.08.2026 - 13:17:53
Privacy-Data & cookie usage: