பெரம்பலூர் நகராட்சி வார்டு தி.மு.க. தேர்தல் அலுவலகங்களை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்!

schedule
2022-02-07 | 09:17h
update
2022-02-07 | 09:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Municipal Ward DMK election offices Minister Sivasankar opens!

11 வார்டு

பெரம்பலூர் நகராட்சி 10 மற்றும் 11,19,15, 5- வது வார்டுகளில் தி.மு.க. தேர்தல் பிரிவு அலுவலகத்தை திமுக மாவட்ட செயலாளர் குன்னம்.சி.இராஜேந்திரன் தலைமையில், நகர செயலாளரும், எம்.எல்.ஏவுமான பிரபாகரன் முன்னிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று மாலை திறந்து வைத்தார்.
நகர் மன்ற 11- வது வார்டு தி.மு.க.வேட்பாளர் அம்பிகா ராஜேந்திரன், 10- வது வார்டு ம.தி.மு.க.வேட்பாளர் செ.ஜெயசீலன், ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.

Advertisement

இதில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், மதிமுக பிரமுகரும், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான க.வரதராஜன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ். அண்ணாதுரை, தி.மதியழகன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்.கருணாநிதி, நகர மாணவரணி அமைப்பாளர் பா. ரினோபாஸ்டின்,
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

10 வார்டு


19-வது வார்டு , 15-வது வார்டு, 5-வது வார்டு பகுதிகளிலும், அமைச்சர் சிவசங்கர் தேர்தல் பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 18:48:03
Privacy-Data & cookie usage: