பெரம்பலுார் நகராட்சி கமிஷனர் கைதாக வாய்ப்பு : அதிகாரிகள் குழு விசாரணை!

schedule
2022-06-14 | 18:49h
update
2022-06-14 | 18:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Municipality officials’ inquiry: Chances are to arrest the commissioner!

பெரம்பலுார் நகராட்சியில், நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, வேலுார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில், 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை செய்தனர்.

பெரம்பலுார், நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த குமரிமன்னன், ராணிபேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சி கமிஷனராக, கடந்த 19ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவர் அங்கு பணியில் சேராமல் இருந்து வந்ததுடன், டிரான்ஸ்பர் ஆர்டரை ரத்து செய்து, இதே இடத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இதில் பல அரசியல்வாதிகளின் ஆதரவை பெற லகரங்களில் கையூட்டு வழங்கியும் வந்ததாக கூறப்படும் நிலையில்,

பெரம்பலுார், நகராட்சியின் முன்னாள் கமிஷனர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்தும், அவரது பணிகாலத்தில் அவரால் கையாளப்பட்ட நகரமைப்பு பிரிவு கோப்புகள், வருவாய் பிரிவு சொத்து வரி விதித்தல் மற்றும் இதர கோப்புகள் பொது சுகாதார பிரிவில் தனியார் மயம், கொள்முதல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மற்றும் பொறியியல் பிரிவு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க, வேலுார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைவராகவும், மறைமலை நகர் நகராட்சி கமிஷனர் லட்சுமி, வால்பாறை நகராட்சி கமிஷனர் பாலு, காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கணேசன், மறைமலை நகர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் தாமோதரன், திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பெர்ட்அருள்ராஜ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்ட ஐந்து பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று உத்தரவிட்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, வேலுார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையிலான, விசாரணை குழுவினர் பெரம்பலுார் நகராட்சி அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் வந்து, மாலை வரை கோப்புகளை பார்வையிட்டு, கணக்குளை சரிபார்த்து ஆய்வு செய்தனர். நாளையும் செய்ய உள்ளனர். 

மேலும், நகராட்சி தலைவர் இல்லாத காலங்களில் நிர்வாகத்தில் ஏதேனும் ஊழல் செய்திருக்கிறா என்றும், கொரோனா காலத்தில் நடந்த கொள்முதல்கள், மற்றும் அம்மா உணவகம், ஒப்பந்ததாரர்களுக்கு வரிவிதிப்பு குறித்த சலுகைகள், சைக்கிள் ஸ்டேண்ட் மற்றும் கடை வரியினங்களில் சலுகை ஏதேனும் வழங்கி ஆதாயம் அடைந்திருக்கிறார் என்றும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பெண் அதிகாரிகளுக்கு சிறப்பு கவனிப்பும் செய்து, பங்கும் கொடுத்தாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும், பில் கலெக்டர்கள் பணிகள் குறித்தும், வரிவிதிப்புகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அவருக்கும் அவருடைய பெண் தோழி ஒருவருக்கும் உள்ள சொத்து மதிப்பு குறித்தும் ரகசிய ஆய்வு நடத்தி வருவதாகவும், புகார்தாரர்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதாயம் அடைந்ததுள்ளா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதோடு, உடல் நிலை சரியில்லாமல் திருச்சி அப்போலோவில் தங்கி சிகிச்சை பெற்று வரும் கமிஷனர் ஓரிரு நாட்களில் துறை ரீதியாக கைது செய்ய வாய்ப்புள்ளதாக நகராட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.08.2026 - 08:12:24
Privacy-Data & cookie usage: