பெரம்பலூர்: ரூ. 6.50 லட்சம் மதிப்பில் பகுதி நேர ரேசன் கடை கட்டடம் வழங்கிய எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு, நன்றி தெரிவித்த இஸ்லாமிய பெண்கள்!

schedule
2026-02-16 | 15:05h
update
2026-02-16 | 15:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Muslim women thanked MLA Prabhakaran for providing a part-time ration shop building worth Rs. 6.50 lakhs!

பெரம்பலூர் மாவட்டம், அயன்பேரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தைக்கால் பகுதியில் நீண்ட காலமாக அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் பகுதி நேர ரேசன் கடை அமைத்து தரக்கோரி சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் கோரிக்கையை விடுத்தனர். அதனை ஏற்ற அவர், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 6. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பகுதி நேர ரேசன் கடையை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். அப்போது சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரனும் உடன் சென்றிருந்த அவர் நிகழ்ச்சி முடிந்தவுடன் திரும்பி சென்ற போது, அவரை அழைத்த அப்பகுதி இஸ்லாமிய பெண்கள் ஒன்று திரண்டு வந்து அவரிடம், தங்கள் பகுதியில் ரேசன் கடை இல்லாததால் பொருட்களை வாங்க ஊருக்குள் இருக்கும் கடைக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொண்டு சுமந்து கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். தற்போது எங்கள் வீட்டருகே தாங்கள் உதவியால் பகுதி நேர ரேசன் கடை திறந்து, அதற்கான கட்டிடததையும் கட்டி முடித்துள்ளதால் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்து அவருக்கு இருகரம் கூப்பி மகிழச்சியுடன் நன்றி தெரிவித்தனர். நன்றியால் மகிழ்ச்சி அடைந்த அவர் மீண்டும் பெண்களுக்கு நன்றி தெரிவித்து காருக்கு திரும்பினர். அப்போது தைக்கால் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 08:17:06
Privacy-Data & cookie usage: