பெரம்பலூர்: 9வயது சிறுமி மர்ம சாவு; தாயிடம் போலீசார் தீவிர விசாரணை!

schedule
2026-06-14 | 19:36h
update
2026-06-14 | 19:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mysterious death of 9-year-old girl; police conduct intense questioning of the mother.

பெரம்பலூர் அருகே பகல்நேரத்தில் வீட்டில் தாயுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் இறந்த சிறுமியின் கழுத்தில் நெரிக்கப்பட்டது போன்ற தழும்பு இருப்பதால் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான குணசேகரன் (34) என்பவரது மனைவி நிஷாந்தி (27). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு கீர்த்திஷா (9) என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிஷாந்தி கடந்த 5 ஆண்டுகளாக பாடாலூர் அருகே காரை கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் தனது தாய்வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியிலேயே நிஷாந்தியின் மகள் கீர்த்திஷா 5 ஆம் வகுப்பு பயின்று வந்ததாகவும் தெரிகிறது.

Advertisement

இந்நிலையில் விடுமுறை தினமான இன்று வீட்டில் மகளுடன் தங்கியிருந்த நிஷாந்தி மதியம் உணவு சாப்பிட்டு விட்டு தன் அருகில் படுத்திருந்த மகள் கீர்த்திஷா அசைவற்று கிடப்பதாகவும், எழுப்பினால் எழுந்திருக்கவில்லை என்றும் இன்று பிற்பகலில் தனது கணவன் குணசேகரனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து குழந்தையை காரை அரசு மருத்துவ மனைக்கு தூக்கி சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் குழந்தையின் கழுத்தில் தழும்பு இருப்பதை கண்ட மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பாடலூர் போலீஸார் குழந்தையின் இறப்பில் சந்தேகமுற்று குழந்தையின் தாய் நிஷாந்தியிடம் தொடர் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மர்மமான முறையில் இறந்து போனதாக கூறப்படும் சிறுமி கீர்த்திஷாவின் உடலை மீட்ட போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, இறந்த சிறுமியின் கழுத்திலுள்ள தழும்பின் தன்மையை திருச்சியில் இருந்து அழைத்து வரப்பட்ட தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். தடயவியல் அறிக்கை மற்றும் உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பிறகே, குழந்தையின் இறப்பு குறித்து உறுதியான தகவல் தெரியவரும். போலீசாரின் முதற்கட்ட விசாணையில், பெரம்பலூரில் உள்ள கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நிஷாந்திக்கு அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்ததுள்ளதாக தெரியவந்துள்ளது.

சகதோழிகளுடன் விளையாடி திரிந்த 9வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 19:40:11
Privacy-Data & cookie usage: