பெரம்பலூர்: காற்று வாங்கிய மூதாட்டியிடம் சுவர் ஏறி குதித்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்!

schedule
2025-04-30 | 10:42h
update
2025-04-30 | 10:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mysterious men jumped over a wall and snatched a gold chain from an elderly woman who had just passed out!

Advertisement

பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள மின் நகரை சேர்ந்த சண்முகம் மனைவி ஜெகதாம்பாள்(74). இவரது மகன் சரவணன் (54), மின்வாரியத்த்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வீட்டில் மருமகள், பேரப்பிள்ளைகள் முதல் மாடியிலும், ஜெகதாம்பாள் தரைதளத்திலும் வெயிலின் வெப்பத்தை தணிக்க காற்று வாங்கி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவன் ஜெகதாம்பாளிடம் அவரது மகன் சரவணன் போன் பேசுவதாக கூறி அருகே போனை காட்டி சுவர் ஏறி குதித்து வந்தவன், ஜெகதாம்பாள் அணிந்திருந்து 3 பவுன் தங்கசங்கிலியை பறித்து கொண்டு பைக்கில் தப்பி ஓடி தலைமறைவானன். இது குறித்த புகாரின் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 01:59:22
Privacy-Data & cookie usage: