பெரம்பலூர்: நடந்த சென்ற பெண்ணிடம் 6.5 பவுன் தங்க செயின் பறித்த மர்ம நபர்கள்!

schedule
2025-10-19 | 00:07h
update
2025-10-19 | 00:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mysterious men snatched a 6.5 pound gold chain from a woman who was walking!

அரியலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆசைதம்பி மனைவி சுசிலாதேவி (65). இவரது மகன்கள் ஆனந்த் (33), சரவணன் (32). மூவரும் சென்னை சென்றவிட்டு, நேற்று சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பஸ்சில் வந்து அரியலூர் செல்வதற்காக பெரம்பலூர் 4 ரோடு சந்திப்பில் இறங்குவதற்காக பஸ்சை நிறுத்த கூறியுள்ளனர். ஆனால், பஸ் ஸ்டாப்பை விட்டு பாலத்தின் மேலே சிறிது தூரம் சென்று தள்ளி பாலத்தின் இறக்கத்தில் இறக்கிவிட்டுள்ளனர். சுசிலாதேவி இரு மகன்களுன் எதிர் திசையில் நடந்து வந்து கொண்டிருந்த போது மதியம் சுமார் 2.30 மணியளவில் பைக்கில் வந்த 2 பேர் சுசிலாவின் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்க செயினை பறித்தனர். அப்போது சுதாகரித்த அவர் செயினை பிடித்து கொண்டார். ஆனால், விடாமல் இழுத்த மர்ம நபர்கள், சுசிலாவிடம் இருந்த பாதி செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். மீதமுள்ள பாதி செயின் சுசிலாவின் கையில் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தங்க செயினை பறித்து மர்ம நபர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.04.2026 - 08:41:41
Privacy-Data & cookie usage: