ட்விட்டரில் முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது !

schedule
2023-05-04 | 18:26h
update
2023-05-04 | 18:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Naam Tamil Party Member arrested for defaming Chief Minister on Twitter!

பெரம்பலூர் ரெங்கா நகைரைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் ராமச்சந்திரன் (34). நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தையும், பெண் ஒருவரின் புகைப்படத்தையும் இணைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அவதூறு பரப்பியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் சுதா(37), என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில், உண்மை என தெரியவர 304/23 US 153, 505(i)(b), 509 IPC r/w 67 A IT ACT ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,
நாம் தமிழர் கட்சியை பிரமுகரான ராமச்சந்திரனை பெரம்பலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.08.2026 - 14:45:06
Privacy-Data & cookie usage: