Perambalur: National deworming tablet distribution camp: Collector information!
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 11.08.2025 அன்று நடைபெற உள்ளது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு 18.08.2025 அன்று வழங்கப்படவுள்ளது. இச்சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயதிலான குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிலான அனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) ஒரே நாளில் வழங்கப்படவுள்ளது. 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் மேம்படும். அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் மூலமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. குடற்புழு மாத்திரைகளை மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்கொண்டு பயன்பெறுமாறு என கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.