பெரம்பலூர்: தேசிய மக்கள் நீதிமன்றம்; வழக்குகளை சமசரம் செய்து கொள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு!

schedule
2024-09-09 | 15:49h
update
2024-09-09 | 15:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: NATIONAL LOK ADALAT ; Notice of the Legal Affairs Commission to settle the cases!

வரும் செப்.14 அன்று பெரம்லூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் (NATIONAL LOK ADALAT) நடைபெற உள்ளது.

இதில் பொதுமக்கள் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போக்கூடிய வழக்குகள் ) நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஓர் அறிய வாய்ப்பாக அமைய உள்ளது.

Advertisement

தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால், தரப்பினர் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம், தீர்ப்பு (ANARD) க்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.
தரப்பினர்களுக்கு வெற்றி-தோல்வி என்ற ஏற்படாத மனப்பான்மை. எனவே, பொதுமக்கள்-வழக்காடிகள் செப்.10 தேதியன்று நடைபெற உள்ள தேசிய மக்கள் மன்றத்தில் தங்கள் வழக்குகளுக்கு சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது சம்மந்தமாக, தினந்தோறும் சமரசப் பேச்சுவார்த்தை பெரம்பலூர், மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206/04328-291252 என்ற தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, பயன் பெறலாம் என சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 02:28:11
Privacy-Data & cookie usage: