பெரம்பலூர் அருகே ஏரியில் மீன் பிடித்த சிறுவன் நீரில் மூழ்கி சாவு

schedule
2016-06-05 | 16:43h
update
2026-06-27 | 07:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் நீரில் தவறி விழுந்ததில் மூழ்கி பலியானான்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அத்தியூரை சேர்ந்தவர் மூப்பன் மகன் கபிலன் (15). இவர் 8ம் வகுப்பு படித்து விட்டு நின்று விட்டார். நேற்று மதியம் கபிலன் தனது நண்பர்களுடன் மீன் பிடிக்க அத்தியூர் ஏரிக்கு சென்று மீன் பிடித்துள்ளனர். பின்னர் மாலை நேரம் ஆகி விட்டதால் நண்பர்கள் கபிலனை தேடி பார்த்தனர். அப்போது ஏரி பகுதியில் காணவில்லை. இதனால் கபிலன் வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்த நண்பர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.

Advertisement

ஆனால் இரவு 10 மணிநேரம் ஆகியும் கபிலன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது தந்தை மூப்பன் மற்றும் உறவினர்கள் கபிலனை தேடி சென்றனர். அப்போது மீன் பிடித்த ஏரிக்கரை பகுதியில் கபிலனின் செருப்பு, சட்டை கிடந்தது. பின்னர் ஏரியில் இறங்கி தேடிய போது சிறுவன் கபிலன் ஏரிக்குள் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

தகவல் அறிந்த மங்களமேடு காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து போன கபிலன் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலுவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 07:35:45
Privacy-Data & cookie usage: