பெரம்பலூர் அருகே ரூ 3 லட்சம் மதிப்புள்ள கரும்பு தோட்டம் எரிந்து சேதம்

schedule
2016-12-24 | 04:26h
update
2026-06-24 | 03:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

#Perambalur near Cane Garden flames damage worth Rs 3 lakh

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புது வேட்டக்குடி துங்கபுரம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள நடராஜன், ( 50), வசந்தா (40), ரெங்கசாமி (60), கோவிந்தசாமி (40) அண்ணாதுரை (60) ஆகியோருக்கு சொந்தமான வயலில் இரண்டரை ஏக்கர் அளவில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது அதில் தற்போது அறுவடை செய்யும் நிலையில் கரும்பு உள்ளது.

Advertisement

இந்நிலையில் நடராஜன் என்பவரது தோட்டத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது அதில் மின் கசிவு ஏற்பட்டு கரும்பு தோட்டம் தீ பற்றியது . வேகமாக பரவிய தீ ஐந்து பேர்களின் வயல்களில் உள்ள கரும்பு தீப்பற்றி எரிந்தது

மேலும் இது குறித்து வேப்பூர் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது நிலைய அலுவலர் புகழேந்தி (பொ) தலைமையில் தீ அணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க பொதுமக்கள் உதவியுடன் தீ அணைந்தார்

இதில் விபத்தில் ரூ 3 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து முற்றிலும் சேதமானது. இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 03:02:52
Privacy-Data & cookie usage: