பெரம்பலூர் அருகே தீ விபத்து : கூரைவீடு சாம்பல்

schedule
2017-04-02 | 20:11h
update
2026-06-25 | 00:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

perambalur near fire acident; hunt burnt


பெரம்பலூர் அருகே கூரை வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.75 மதிப்புள்ள பொருட்கள் எரிந்து பாழாய் போனது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர் கிராமத்தில் காட்டுக்கொட்டகையில் வசிப்பவர் செல்லப்பன்(வயது 45). இவர் அதேபகுதியில் உள்ள தனது கூரைவீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் மின்கசிவு காரணமாக அவரது கூரைவீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ வேகமாக பரவி வீடு முழுவதும் எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் பெரம்பலூர் தீயனைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த நிலக்கடலை, நெல், மக்காசோளம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் உட்பட ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து வீணானது. இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பாதிக்கபட்ட குடும்பத்திற்கு வருவாய் துறையினர் நிவாரண உதவிகள் வழங்கி உள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 00:31:03
Privacy-Data & cookie usage: