#Perambalur near kottarai village special mcp day: Rs .4.27 crore welfare assistance provided

பெரம்பலூர் அருகே கொட்டரை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் : ரூ.4.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன் பெறுவதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.32,600 தொகை மதிப்பிலான தையல் இயந்திரங்களும், ஊரக வளர்ச்சித் துறை மூலம் 24 நபர்களுக்கு ரூ.53,லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான தனிநபர் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான ஆணைகளையும், கால்நடைத் துறை மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.97,125- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,

கூட்டுறவுத் துறை மூலம் கடன் பெறும் சுயஉதவிக் குழுக்களில் 161 பயனாளிகளுக்கு ரூ.29,13,000ஃ- மதிப்பிலான கடன் தொகையும், சமூகநலத் துறை மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மற்றும் திருமண உதவித் தொகை திட்டங்களின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.50,335- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.11,97,225ஃ- மதிப்பிலான அரசு வழங்கும் மானிய உதவியுடனான வாகனங்களையும், தோட்டக்கலைத் துறை மூலம் பாரத பிரதமர் சொட்டு நீர் பாசன திட்டம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவிலான வெங்காய கொட்டகை அமைத்தல் போன்ற பல திட்டங்களின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.8,60,838- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,

புதுவாழ்வுத் திட்டம் மூலம் நலிவுற்றோர் கடன் உதவி திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.1,40,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட தொழில் மையம் மூலம் 1 பயனாளிக்கு ரூ.7,00,000- மதிப்பிலான தானியம் உற்பத்தி இயந்திரத்தை அரசு மானிய உதவியுடனும்,

வருவாய்த்துறை மூலம் 381 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரூ.2,78,76,416- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத் துறை மூலம் இடுபொருள் வழங்குதல் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.7,94,750- மதிப்பிலான உதவிகளும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் 1 பயனாளிக்கு ரூ.26,49,264- மதிப்பிலான வாடிக்கையாளர் இயந்திர சேவை மையம் அமைத்தல் என 613 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4,27,09,553- மதிப்பிலான உதவிகளை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகுமார் ஆகியோர் வழங்கினார்.

ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் மற்றும் வருவாய்துறை மற்றும் வளர்ச்சிதுறை பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!