பெரம்பலூர் அருகே அதிகாரிகள் அலட்சியம் சாலை சரியில்லாததை கண்டித்து நாற்று நட்ட பெண்கள்

schedule
2017-01-30 | 13:07h
update
2026-06-24 | 15:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In protest at the authorities ignored : Perambalur near public planting for the road unfit

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் பேரளி கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் வீதிகளில் முழுவதும் சேறும் சகதியுமாய் காட்சி அளிக்கிறது. மழைக்கு முன்பே பல முறை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் வெறுப்படைந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு வீதிகளில் நெற்பயிர் நாற்றை பிடுங்கி வந்து நட்டு இன்று தங்களது எதிர்ப்பை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். தெருவெங்கும் சேறும் சகதியாயுமாய் இருக்கும் நீரில் கொசுக்கள் தங்கி நோய் பரப்பி வருவாதாகவும், குழந்தைகள் தெருக்களில் நடந்து விளையாட முடியாமலும், வயதானவர்கள் தெருக்களில் நடக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். தெருக்களில் சாலை போடாவிட்டாலும், மண்ணையாவது கொட்டி முதற்கட்டமாக சமன் செய்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 15:45:01
Privacy-Data & cookie usage: