பெரம்பலூர் அருகே விபரீதம்: கணவர் கண்டித்ததால், விஷம் குடித்த வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்ட இளம் பெண்.

schedule
2019-06-12 | 17:13h
update
2019-06-12 | 17:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur near the cranky husband denounced the poison young woman drinking a video posted on tiktok.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் சிங்கபூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 24) இளம் பெண். இவருக்கு மோனிகா (5) அனிரூத் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அனிதாவிற்கு ஸ்மார்ட் போன் டிக் டாக் செயலில் அவ்வப்போது வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், இவரது பெண் குழந்தைக்கு காலில் அடிப்பட்டதாகவும், அதை அறிந்த வெளிநாட்டில் உள்ள கணவர் அனிதாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அனிதா விஷம் குடித்தார். இதை பார்த்த மகள் மோனிகா தனது பாட்டியிடம் கூறி உள்ளார்.

உடனடியாக விஷம் குடித்த அனிதாவை அங்கிருந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். மேலும் அனிதா இறக்கும் தருவாயிலும் டிக் டாக் செயலி மோகத்தால் தான் விஷம் அருந்துவதையும் பதிவேற்றி உள்ளார்.

டிக் டாக் மோகத்தால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த வாரம் கணவர் ஊர் திரும்பும் நிலையில் உள்ளார்.
இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 20:35:05
Privacy-Data & cookie usage: