பெரம்பலூர் அருகே முறையாக குடிநீர் வினி யோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

schedule
2017-03-25 | 05:55h
update
2026-06-24 | 07:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur near the public at the time the demand for drinking water supply blocked a road.

பெரம்பலூர் அருகே வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கணவாய், தம்பிரான்பட்டி கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் தெரிவித்த பொது மக்கள் தண்ணீருக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று எடுத்து வரும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி இன்று காலை பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வேலூர் உள்ளிட்ட சில கிராமங்களில் சிலரது வீடுகளில் குடிநீர் குழாய்களில் மின்மோட்டாரை வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதால் பெரும்பாலான வீடுகளுக்கு குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. எனவே மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். மேலும் வாரத்திற்கு ஒரு முறை சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பெரம்பலூர் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டததால் சுமார் ஒரு மணி நேரம் பெரம்பலூர் செட்டிக்குளம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 07:45:48
Privacy-Data & cookie usage: