பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் கோவில் கும்பாபிஷேகம்

schedule
2017-03-05 | 11:04h
update
2026-06-25 | 01:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur near the temple consecrated kurumbalur

பெரம்பலூர் அருகே கோவில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள கெங்கவல்லி ரெட்டியார், ஆலடி முத்துசாமி, கருப்பண்ணசுவாமி, சித்தன்ன கருப்புசாமி, மற்றும் பரிவார தேவதைகளின் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜையும், காலையில் கணபதி, பூர்ணாஹீதி ஹோமங்கள் நடைபெற்று மூலவர் பரிவார கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

விழா இதில் பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம், குரும்பலூர், பாளையம், எளம்பலூர், செங்குணம், விளாமுத்தூர், நெடுவாசல், சிறுவாச்சூர், புதுநடுவலூர், நொச்சியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலில் அன்னதானம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வருவாய், காவல், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 01:53:47
Privacy-Data & cookie usage: