பெரம்பலூர் அருகே லாரி

வேன் நேருக்கு நேர் மோதல் : 16 பெண்கள் உள்பட் 38 பேர் காயம்!

schedule
2017-08-29 | 19:18h
update
2026-07-03 | 11:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur near the truck – van confrontation: 16 Ladies includ 38 injured!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 பெண்கள் உட்பட 38 பேர் படுகாயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

கடலூர் மாவட்டம், கழுதூர் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த 38 பேர் ஒரு வேனில் அரியலூர் மாவட்டம் வி.கைக்காட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்திற்கு ஒரு விஷேச நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

வேன் அகரம்சீகூர்-அரியலூர் சாலையில் சின்னவெண்மணி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அரியலூரிலிருந்து அகரம்சீகூர் நோக்கி வந்த லாரியும் வேனும் எதிர்பாரத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறிய வேன் பக்க வாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த 16 பெண்கள் உட்பட 38 பேரும் வேன் டிரைவர் பச்சையப்பன், லாரி டிரைவர் செல்வம் ஆகியோரும் படுபாயமடைந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொண்டனர்.

இதனை கண்டு அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொது மக்கள் விபத்தில் சிக்கியவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் சாலை விபத்தினால் அரியலூர்&-அகரம்சீகூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 11:49:05
Privacy-Data & cookie usage: