பெரம்பலூர் அருகே ஏரிக்கரையில் கொத்தனார் மர்மமான முறையில் சாவு : போலீசார் விசாரணை

schedule
2018-02-13 | 14:39h
update
2018-02-13 | 14:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

perambalur Nera bricklayer in the lake near the mysterious death: police investigation

பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூர் ஏரிக்கரையில் இன்று மர்மமான முறையில் பூலாம்பாடி சித்தேரி ஏரிக்கரையில் ஆண் நபர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் திருப்பதி ( வயது 43) என்பதும், அவருக்கு, மனைவி சித்ரா (37). கவிதா, கீதா, நித்யா என்ற மூன்று மகள்களும், சக்தி என்ற மகனும் உள்ளதும் தெரிய வந்தது.

Advertisement

திருப்பதிக்கும் சித்ராவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சித்ரா குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் திருப்பதிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பூலாம்பாடியை சேர்ந்த அப்பெண்ணின் கணவர் இறந்து விட்டார்.

அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் தனது கணவர் ஊரான பூலாம்பாடியில் மாமனார் வீட்டில் வளரும் தனது மகளை பார்ப்பதற்கு அடிக்கடி வந்து செல்வாராம். இந்நிலையில் இன்று, பூலாம்பாடி சித்தேரிக்கரையில் திருப்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் தெரிந்த அரும்பாவூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைகக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிந்த போலீசார், திருப்பதி எப்படி இறந்தார் என்பது குறித்தும், அப்பெண்ணை விசாரணை செய்ய அவரை தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார். வழக்கில் கூடுதல் தகவல் கிடைக்க அப்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.09.2026 - 07:13:52
Privacy-Data & cookie usage: