பெரம்பலூர்: புலம் பெயர் தொழிலாளர்களுக்கு யானைக்கால், மலேரியா நோய் கண்டறிய இரவு நேர ரத்த தடவல்கள் சேகரிக்கும் பணி!

schedule
2026-05-16 | 17:47h
update
2026-05-16 | 17:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Nighttime blood tests to detect elephantiasis and malaria in migrant workers!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் கீதா உத்தரவின்படி, வடமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் மற்றும் மலேரியா கண்டறிவதற்கான இரவு நேர இரத்த தடவல்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நேற்று பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் உள்ள அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரத்த தடவல்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பூச்சியில் வல்லுநர் ராமர, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் உள்பட ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2026 - 18:29:05
Privacy-Data & cookie usage: