பெரம்பலூர்: நிலன் நீரிழிவு சிகிச்சையகம், சிறுவாச்சூர் ஆண்டவர் டைல்ஸ் சார்பில், சிறுவாச்சூரில் மருத்துவ முகாம்!

schedule
2025-08-25 | 06:48h
update
2025-11-01 | 15:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Nilan Diabetes Clinic, Siruvachur Andavar Tiles, organized a medical camp in Siruvachur!

பெரம்பலூர் நிலன் நீரிழிவு சிகிச்சையகம், சிறுவாச்சூர் ஆண்டவர் டைல்ஸ், பெரம்பலூர் மாவட்ட யூனியன் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், சிறுவாச்சூரில் உள்ள மத்திய அரசின் மக்கள் மருந்தகம், ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமை சிறுவாச்சூர் மானிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடத்தியது. முகாமில் நீரிழிவு (சர்க்கரை) நோய் நிபுணர் டாக்டர் லக்ஷிதா தலைமையில், பொது மருத்துவர் வர்ஷினி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். மக்கள் மருந்தகம் சார்பில் நோயாளிகளுக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. சிறுவாச்சூர், அய்யலூர், விஜயகோபாலபுரம், நொச்சியம், விளாமுத்தூர், மருதடி உள்ளிட்ட சுற்றுவட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர். சிறுவாச்சூர் ஆண்டவர் டைல்ஸ், பெரம்பலூர் மாவட்ட யூனியன் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் முகாமிற்கான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அகில அய்யப்ப சேவா சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட யூனியன் தலைவர் கண்ணன், செயலாளர் பாலகிருஷ்ணன், சிறுவாச்சூர் ஆண்டவர் எண்டர்பிரைசஸ் டைல்ஸ் ஷோரூமின் பங்குதாரர் யோகநாதன், பெரம்பலூர், சிறுவாச்சூர் மக்கள் மருந்தகங்களின் உரிமையாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 20:19:52
Privacy-Data & cookie usage: