பெரம்பலூர்: CM வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை; ஓவர் லோடு ஏற்றிய லாரிகள் வர எதிர்ப்பு தெரிவித்து கிரசர் லாரிகளை சிறைப்பிடித்த கிராம மக்கள்!

schedule
2026-09-01 | 08:02h
update
2026-09-01 | 08:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: No action taken despite complaints reaching the Chief Minister; villagers detained overloaded crusher lorries in protest against their movement.

பெரம்பலூர் அருகே ஓவர் லோடு ஏற்றப்ட்ட சுமார் 60 டன் எடை ஏற்றிய லாரிகள் கற்களை குவாரிக்கு ஏற்றிச் செல்வதால் சாலை சேதமடைவதாக கூறி நேற்று காலை எசனை கிராமத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் இன்று காலை பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ள நார்காரன் கொட்டாய் (கோவிந்தபுரம்) என்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எசனை ஆலங்கிழியில் இருந்து சோமண்டாபுதூர், நார்காரன் கொட்டாய் வழியாக வந்து பெரம்பலூர் – ஆத்தூர் சாலை பகுதிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வழியாக அதிக பாரங்களை ஏற்றி வந்த கிரசர் லாரிகளை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் தெரிவித்தாவது;வண்டி ஒரு நிமிஷத்துக்கு பார்த்தீங்கன்னா ஒரு 10 வண்டிலைன் லைனா வந்துகிட்டே தான் இருக்கு. ரோடு இதுல நாசமாகிறது, புழுதி கிளம்பி நிறைய பேருக்கு பாதிக்கப்படுறாங்க. ஸ்கூல் பிள்ளைங்க வந்து போகிற பகுதி, டயர் வெடிச்சு ஒரு டிரைவர் நிக்காம கூட போறான். நாங்க கத்து கத்துன்னு கத்துறோம். என்ன ஏதுன்னு கண்டுக்கல பஸ் ஸடாப்ல நிற்கும் போது புழுதி அடிக்குது. அதிக சத்தத்தால் இறைச்சல் ஏற்படுகிறது.நாங்க வந்து இன்னைக்கு மறியல் பண்ணி இருக்கோம். தாசில்தார் வர சொல்லி இருக்காங்க. நாங்க சி.எம் வரை பெட்டிசன் போட்டு இருக்கோம். அதுக்கும் இன்னைக்கு வரைக்கும் எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் வரல.

Advertisement

எங்களுக்கு கனரக வாகனங்கள் இந்த ஏரியாவுக்கு வரக்கூடாதுங்க. அதுதான் எங்கள் கோரிக்கை. 60 டன் பக்கமா இதுல வந்தா ரோடு அதிக பள்ளமாகிவிட்டது. ஸ்கூல் பிள்ளைங்க வண்டியில போயிட்டு வர்றது கூட முடியல. எந்த அளவுக்கு ரோடு பாதிக்கப்பட்டு இருக்கு நீங்களே பாருங்க, முழங்கால் பள்ளத்தை விட தாண்டிடுச்சு. இந்த பள்ளங்களில் நிறைய பேர் கீழே விழுந்திருக்காங்க, நேத்துக்கெல்லாம் ஒருத்தவரு கறந்து எடுத்து வந்த பாலை போட்டு 40 லிட்டர் பால் கீழே கொட்டி போயிடுச்சு என தெரிவித்தார். மேலும், இது குறித்து தாசில்தார் தலைமையில் இன்று அப்பகுதி மக்கள் கிரசர் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2 நாட்களாக எசனை, கோவிந்தபுரம் பகுதியில் கனரக லாரிகள் செல்வதால் சாலைகள் சேதமடைவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 08:46:36
Privacy-Data & cookie usage: