பெரம்பலூர்: கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை; சொந்த செலவில் பாதையை சீரமைத்த விவசாயிகள்!

schedule
2026-08-10 | 16:33h
update
2026-08-10 | 16:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: No action taken despite submitting petitions to the Collector and other officials; farmers repair the path at their own expense!

Advertisement

பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையின் கீழ்புறம் அமைந்துள்ள விவசாயிகளுக்கு ஏரிக்கரையே பாதையாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக கரைகளின் இருபுறமும் உள்ள கருவேல முட்கள் பாதை ஆக்கிரமித்து வருகின்றன. அவ்வழியாக செல்லும் விவசாயிகள், மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லப்படும் கால்நடைகள், விவசாய பணிக்கு செல்லும், தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகி முட்களில் உள்ளே புகுந்து சென்று வந்தனர். கரையை விட்டு கீழே இறங்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லாததால், காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என சினிமா பாடலை போல் வெறுத்துப் போன விவசாயிகள் ஒன்று திரண்டு, அவர்களின் சொந்த செலவிலேயே பொக்லைன் அமைத்து இருபுறமும் பாதையை ஆக்கிரமிப்பு முட்களை அகற்றினர்.

எந்த ஆட்சி வந்தாலும் இப்படித்தானா, கேட்பார், செய்வார் எவரும் இல்லையா? ஆட்சிதான் மாறி உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கை மாறவில்லையே? விவசாயிகள் அவர்கள் நிலையை நினைத்து நொந்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.08.2026 - 16:36:12
Privacy-Data & cookie usage: