Perambalur: Notification regarding the recruitment of Para Volunteers at Police Stations!
பெரம்பலூர் சட்டப் பணிகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் வேப்பந்தட்டை மற்றும் குன்னம் ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, குழந்தை தொழிலாளர் முறை மற்றும் கடத்தலுக்கு எதிரான குற்றங்களிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் காணாமல் போன குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து கல்வி கற்பிப்பதன் மூலம் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்க 10 “சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers) தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வரவேற்கப்படுகின்றனர். கீழ்கண்ட பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் சமூக சேவை புரியும் சமூக ஆர்வலர்கள், அரசியல் அமைப்பு சாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் NGO உறுப்பினர்கள், உளவியலாளர்கள் (மனோதத்துவ நிபுணர்கள்), ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மேற்கண்ட பிரிவினர்கள் சட்ட தன்னார்வ தொண்டராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் https://perambalur.dcourts.gov.in/ பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 13.05.2026 -ம் தேதி மாலை 05.30 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ (அ) நேரிலோ விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்த பணிக்கு மதிப்பூதியம் தவிர சம்பளம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஏதும் கிடையாது. மேற்படி பணியில் இணையும் நபர்களது பணியினை தன்னார்வலர்களாக மட்டுமே கருதப்படும். நிரந்த பணியென கருத இயலாது. மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (அ) வேப்பந்தட்டை மற்றும் குன்னம் வட்ட சட்டப்பணிகள் குழுக்களை அணுகலாம். முதன்மை மாவட்ட நீதிபதியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமானவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். .