பெரம்பலூர் : மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள்; கலெக்டர் அறிவிப்பு!

schedule
2024-09-04 | 15:51h
update
2024-09-05 | 08:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur : Nutrition Awareness Competitions for Women Self Help Groups : Collector Notice!

கிராமப் புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர்களுக்கு போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் இரத்த சோகை இல்லாத கிராமமாக மாற்ற சிறப்பு பிரச்சாரம், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்திடவும் பாரம்பரிய உணவு வகைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் வட்டாரம், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 121 ஊராட்சிகளில் 09.09.2024 முதல் 12.9.2024 வரை நடைபெற உள்ளது.

Advertisement

முதல் பரிசு ரூ.300ம், 2ம் பரிசு ரூ.200ம், 3ம் பரிசு ரூ.100-ம் வழங்கப்படும். வட்டார அளவில் 16.9.2024 முதல் 20.9.2024 வரை போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.2,500-ம், 2ம் பரிசு ரூ.2,000-ம், 3ம் பரிசு ரூ.1,500-ம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான போட்டி 25.9.2024 அன்று நடைபெறும். முதல் பரிசு ரூ.5,000-ம், 2ம் பரிசு ரூ.4,000-ம், 3ம் பரிசு ரூ.3,000-ம் வழங்கப்படும். மேலும், 2 நபருக்கு ரூ.2,500 வீதம் சிறப்பு பரிசு ரூ.5,000-மும், 3 நபருக்கு ஆறுதல் பரிசாக ரூ.2,000 வீதம் ரூ.6,000-மும், சான்றிதழ்களும் வழங்கப்படும். கிராம ஊராட்சிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் வட்டார அளவில் நடைபெறும் ஊட்டசத்து போட்டிகளிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுக்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும், விவரங்களுக்கு வட்டார இயக்க மேலாளர்களை பெரம்பலூர் 96599 35852, ஆலத்தூர் 88704 60112, வேப்பந்தட்டை 63837 74958, வேப்பூர் 80987 39490 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 02:48:50
Privacy-Data & cookie usage: