Perambalur: Officials ignored quarries worth crores—where excavation is plunging to dizzying depths—and instead seized stones worth just ₹12,000!
புவியியல் மற்றும் சுரங்கத்துறை துனை இயக்குநர் விஜயகுமாரன் விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா அறிவுருத்தலின்படி, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துனை இயக்குநர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் (கனிமம்) ஆகியோர் இன்று காலை 09.20 மணி அளவில், கல்பாடி மருதையான் கோயில் – நெடுவாசல் சாலையில் மேல் நிலை தண்ணீர் தொட்டி அருகில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த போது TN 46 AC 8002 (Taurus Lorry ) மற்றும் TN 61 M 9733 (Taurus Lorry ) என்ற எண் கொண்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் அரசு உரிய அனுமதியில்லாமல் உடைகற்கள் ஏற்றிவந்ததை அதிகாரிகள் மடக்கி பிடித்ததுடன், வாகனத்தில் இருந்த தலா 6 யூனிட் உடைகற்கள் இருந்தது எனவும், அதன் மதிப்பு ரூ.12000/- என்றும், அந்த லாரிகளை கைப்பற்றி மருவத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், கோடிக்கணக்கான மதிப்புள்ள மலைகள் பிளக்கப்பட்டு அதளபாதளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலைகள் மடுவாக மாறி தடயம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகின்றன. மலைகள் கற்கள் உடைக்கப்பட்டு பெரிய ஏரிகள் போல் அல்லாமல் சுமார் 50 – 100 மீட்டர்கள் கொண்ட பள்ளங்களாக கொடூரமாக காட்சி தருகின்றன.
புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதில் எந்தெந்த காலத்தில் யாருக்கு குவாரிகள் ஏலம் விடப்பட்டது. எவ்வளவு தோண்ட அனுமதிக்கப்பட்டது. காணாமல் போன கல் மண் எத்தனை டன் என்பது குறித்தும், தற்போது குவாரிகள் ஆழம் என்ன? என்பதையும் வெளியிட வேண்டும் எனவும், எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், இது குறித்து விசாரிப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ட்ரோன் மூலம் அளவீடு செய்ததையும் வெளியிடுவேண்டும் எனவும், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். யானையை விட்டுவிட்டு பூனையை அதிகாரிகள் பிடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.