Perambalur: Officials recover and return gold chain misplaced at polling station to voter!
பெரம்பலூர்: 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்துமுடிந்தது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எளம்பலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், நேற்று (23.04.2026) வாக்களிக்கச் சென்ற சிவக்குமார் மகன் கவுசிகன் என்பவர், வாக்கு செலுத்திவிட்டு வந்த போது தான் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை எதிர்பாராத விதமாக தவறவிட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எளம்பலூரில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபாகர் மற்றும் கிராம உதவியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கச்சங்கிலியை கண்டுபிடித்து தேர்தல் நடத்தும் அலுவலரும், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியருமான அனிதாவிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து தங்கச்சங்கிலியை தவறவிட்டதா புகார்தெரிவித்திருந்த நபரை நேற்று (24.04.2026) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து, சங்கிலியை கண்டுபிடித்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோரின் கைகளாலேயே உரியவரிடம் தங்கச் சங்கிலியை ஒப்படைக்கச்செய்த வருவாய் கோட்டாட்சியர் பொறுப்புணர்வுடன் பணியாற்றிய இருவரையும் பாராட்டி வாழ்த்தினார். அப்போது அவரின் நேர்முக உதவியாளர் மு.பாரதிவளவன் உடனிருந்தார்