பெரம்பலூர்: ஸ்கூட்டர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து; ஒருவர் பலி!

schedule
2026-04-26 | 15:25h
update
2026-04-26 | 15:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Omni bus collides with scooter; one dead!

பெரம்பலூர் அருகே இன்று காலை முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது ஆம்னி பஸ் பின்னால் சென்று மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அடையூர் கிராமத்தை சேர்ந்தவர் அலாவுதீன் (60). இவர், பெரம்பலூர், தீரன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகிறார். இவருக்கு சம்சாத் பேகம் என்ற மனைவியும், ராஷித் (30), அனஸ்தீன் (22) என இரு மகன்கள் உள்ளனர். ராஷித் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அனஸ்தீன் (22) பெரம்பலூர் கல்லூரியில் பி.பி.ஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், இன்று வழக்கம் போல துறைமங்கலம் மசூதிக்கு தொழுகைக்கு ஸ்கூட்டரில் தொழுகைக்கு சென்றுக் கொண்டிருந்த போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் மேம்பாலம், அருகே சென்ற போது பின்னால், கேரளா மாநிலம் திருவனந்தபுரந்தில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பேருந்து அலாவுதீன் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அலாவுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அலாவுதீன் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆம்னி பஸ் டிரைவரான சென்னை சாலிகிராமம் அருகில் உள்ளள விஜயராகபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2026 - 15:28:08
Privacy-Data & cookie usage: