Perambalur: On the 57th death anniversary of former Chief Minister Anna, DMK members paid their respects by garlanding his statue.
திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 57- ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கடை வீதியில் அமைதி ஊர்வலம் சென்று அங்குள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப. பரமேஸ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, சி.ராஜேந்திரன், டாக்டர் ஜெயலட்சுமி கருணாகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பூலாம்பாடி பேரூர் செயலாளர் செல்வலட்சுமி சேகர், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.