பெரம்பலூர்: குவாரி மண் சரிவில் சிக்கியதில் ஒருவர் பலி என அச்சம்! மற்றொருவர் காயம்; விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு!

schedule
2026-01-10 | 19:24h
update
2026-01-11 | 06:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: One feared dead in a landslide at a quarry! Another injured; the Collector has ordered an inquiry!

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளத்தில் இன்று மாலை கல்குவாரியில் வெடி வைத்து விட்டு திரும்பிய தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கினர். இதில் கூலி தொழிலாளி ஒருவர் இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.

Advertisement

செட்டிகுளம் கிராமத்தில் தனியார் கிரசருக்கு சொந்தமான கல் குவாரியில் இன்று மாலை பாறைகளில் இருந்து கற்களை உடைத்து எடுக்க தொழிலாளர்களான பரத் மற்றும் கூலி தொழிலாளியான திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கோதூர்பட்டியை சேர்ந்த ராமதாஸ் மகன் சக்கரவர்த்தி (45) ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர். வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட பின்னர் வெடிப்பதற்கு பயன்படுத்திய கம்பிகளை சுற்றினர். அப்போது திடீரென்று கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் பரத் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுமார் 40 அடி பள்ளத்தில் சக்கரவர்த்தி மண் சரிவில் சிக்கி கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கலெக்டர் மிருணாளினி, போலீஸ் எஸ்.பி அனிதா, டி.எஸ்.பி. ஆனந்தி மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்திற்கு ராட்சத பொக்லைன் வாகனம் வரவழைத்து சக்கரவர்த்தியை மீட்கும் பணிகள் இருட்டு நேரத்திலும், மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 13:05:55
Privacy-Data & cookie usage: