onion #பெரம்பலூர் : வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகம் இணைந்து இன்று செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் சின்ன வெங்காயத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் வெங்காயத்திலிருந்து வெங்காய ஊறுகாய், வெங்காய கூழ் மற்றும் உப்புக் கரைசலில் ஊறவைத்த வெங்காயம் உள்ளிட்டவைகளை எவ்வாறு தயாரிப்பது தொடர்பான செயல்முறை விளக்கங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வயல் வெளிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் சிறிய வெங்காயத்தை அதிக நாட்கள் நிறம் மாறாமல் மற்றும் எடை குறையாமல் இருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வெங்காய சேமிப்பு பட்டறையின் அமைப்பு மற்றும் செயல் விளக்கங்கள் இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தின் அலுவலர்கள் மூலமாக விவசாயிகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அனந்த ராமக்கிருஷ்ணன் பேசியதாவது:

நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருட்களில் மிகவும் அவசியமானது சின்ன வெங்காயம். இது உள்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், பழங்கள் மற்றும் காய்கறிகள் மத்தியில் உயா;ந்த அந்நியச் செலவானி வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய ஒரு முக்கியமான பயிர் ஆகும்.

உலகளவில் வெங்காய உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. இந்தியாவில் வெங்காய உற்பத்தி ஒரு கணிசமான அளவு என்றாலும் உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி கோரிக்கைகளை சந்திக்க, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அவசியம். இதனை கருத்தில் கொண்டு இந்திய பயிற் பதன தொழில்நுட்ப கழகம் வெங்காயத்தில் மதிப்புக்கூட்டு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் அதிகப்படியாக சிறிய வெங்காயம் உற்பத்தியாகும் பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் சின்ன வெங்காயத்தில் மதிப்பு கூட்டுதல் பொருட்கள் தயாரிப்பது தொடா;பாக நடைபெற்ற பயிற்சி முகாமில், வெங்காயத்திலிருந்து வெங்காய ஊறுகாய், வெங்காய கூழ் மற்றும் உப்பக்கரைசலில் ஊரவைத்த வெங்காயம் உள்ளிட்டவைகளை எவ்வாறு தயாரிப்பது தொடர்பான செயல்முறை விளக்கங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது.

இதன் மூலமாக சின்ன வெங்காய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வெங்காயத்திலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பது மற்றும் அதனை விற்பனை செய்வது தொடர் பான செயல்முறைகளை கற்பதன் மூலமாக வெங்காய விலை வீழ்ச்சி அடையும் போது, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படாது. மேலும் இதுபோன்ற தொழில் நுட்பங்கள், தமிழக அளவில் சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை உலகளாவிய வெங்காயத்திற்கான வணிக நகரமாக மாற்ற உதவும். மேலும், வெங்காயத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றத் தேவையான இடவசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தை சேர்ந்த டாக்டர்.ஜெகன்மோகன் “மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்கள்” குறித்தும், டாக்டர் சினிஜா “வெங்காய சேமிப்பில் நவீன தொழில் நுட்பங்கள்” குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!