Perambalur: Online Bill Payment and New Electricity Connection Services Suspended — Electricity Board Announces!
பெரம்பலூர்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘கணினி தரவு வழங்கிகளை’ படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், திருச்சி மண்டலத்தில் உள்ள அலுவலக, இணையவழி மின்கட்டண செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் 16.05.2026 (சனிக்கிழமை) 06:00 மணி முதல் 17.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) 24:00 மணி வரை இயங்காது, என பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.