Perambalur: Online Services Introduced for Membership Enrollment and Access to Welfare Benefits under the Denotified Tribes Welfare Board — Collector Informs.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நலத்திட்ட உதவிகளை பெற விரும்பும் நபர்கள் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும், 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவராக இருக்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ளோர், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி உடையவர்கள் ஆவர்.
மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் WWW.dncwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது அலுவலர் தொலைபேசி எண்.94454 77838 –ஐ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.