பெரம்பலூர்: செங்குணம் கிராமத்தில் புதிய கிரஷருக்கான உத்தரவு ரத்து!

schedule
2025-11-04 | 11:36h
update
2025-11-13 | 15:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Order cancelled for new crusher in sengunam village!

பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் பகுதியில் இயங்கிவரும் பல்வேறு கிரஷர் மற்றும் குவாரிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காற்று மற்றும் நீர் மாசு அடைந்த நிலையில் இருப்பதாகவும், இந்நிலையில் தற்போது செங்குணம் பகுதியில் விவசாய நிலத்தில் தனியார் ஒருவரின் கிரஷர் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் கிரஷர் அமைக்க சம்மந்தப்பட்ட நபர்களால் பூமிபூஜை நடத்தப்பட்டது என்றும், அதனை ரத்து செய்திட வேண்டும் என்றும் 31.10.2025 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ந.மிருணாளினியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று செங்குணம் கிராமத்தில் புதிதாக கிரஷர் அமைக்க அளிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 09:41:56
Privacy-Data & cookie usage: