பெரம்பலூர்: உறுப்புகளை தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

schedule
2024-04-12 | 17:39h
update
2024-04-12 | 17:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Organ donor’s body buried with state honors!

பெரம்பலூர் அருகே உள்ள ரஞ்சன்குடியைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை (47). கொத்தனார் வேலை செய்துவந்த இவர் கடந்த 9.4.2024 அன்று இரவு சுமார் 8 மணியளவில் தனது வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அடிபட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மனைவி சாந்தி (37) என்பவர் கணவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்துள்ளார்.

இறந்த திரு.பிச்சைப்பிள்ளை என்பவருக்கு 21 வயதில் மனவளர்ச்சி குன்றிய நிலையில் பிரகாஷ் என்ற மகனும், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மகளும் உள்ளனர்.

உடல் உறுப்புகளை தானம் செய்யும் நபர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திட வேண்டும் என்ற அரசின் உத்தரவின்படி, இன்று (12.04.2024) ரஞ்சன்குடியில் சுப்பிரமணியர் கோவில் அருகே (காந்தி நகரில் இருந்து கூட்டுறவு வங்கி செல்லும் வழியில்) பிச்சைப்பிள்ளையின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார் ஆட்சியர் சு.கோகுல் கலந்து கொண்டு பிச்சைப்பிள்ளையின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.08.2026 - 02:49:41
Privacy-Data & cookie usage: