உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும், பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர். பச்சமுத்துவிற்கு செபி பேராயம் ஆதரவு!

schedule
2019-03-23 | 05:53h
update
2019-03-23 | 06:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Perambalur parliamentary candidate TR.Patchamuthu Cebi Convention Support

மதசார்பற்ற கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் ஐ.ஜே.கே நிறுவனர் டி.ஆர்.பச்சமுத்துவிற்கு செபி பேராயம் ஆதரவளித்துள்ளது.
Advertisement

திருச்சியில் , வேட்பாளர் டி.ஆர். பச்சமுத்துவை, சந்தித்த பேராயர்கள் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
செபி பேராயத்தின் தேசியத் தலைவர் பிஷப் நோவா யுவனராஜ், தமிழக சிறுபான்மை தலைவர் பிஷப் மேஷாக் ராஜா, திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட பேராய தலைவர் பிஷப் சேத் மேத்யூஷ், சென்னை மாவட்ட தலைவர் பிஷப் தாம்சன் தாசன், தென் சென்னை மாவட்ட தலைவர் ஜேக்கப், சென்னை தலைமை பேராயம் பொறுப்பாளர் பிஷப் ஜேம்ஸ் பால், தஞ்சாவூர் பேராய தலைவர் பிஷப் முரளி மனோ, தலைமை பேராய பொறுப்பாளர் சுரேஷ் உட்பட முக்கிய நிர்வாகிகள் டி.ஆர்.பச்சமுத்துவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதே போன்று, மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் மாநிலச் செயலர் நாச்சிகுளம் தாஜுதீன் மாநில இளைஞரணி துணை செயலர் இப்ராஹிம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட திருச்சி மாவட்ட செயலர் கே.எம்.கே.ஹபிபுர் ரஹ்மான் தேவேந்திர குல மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் பி.அம்பிகாபதி மற்றும் மக்கள் தமிழ் தேசம் யாதவ சமுதாய சங்கம் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உட்படப் பல கட்சி மற்றும் அமைப்பு நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.08.2026 - 21:09:12
Privacy-Data & cookie usage: