Perambalur: Partner chases woman in live-in relationship onto the street naked; police investigating.
பெரம்பலூர் நகரில் அக்கம்பக்கத்து கிராமங்களில் வசித்த வந்த, திருமணமாகி குழந்தைகள் உள்ள ஆண் மற்றும் பெண் இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவால் அவரவர் வீட்டில் இருந்து விலகி இருந்தனர். இந்நிலையில் திருமணம் செய்யாமலேயே வீட்டில் இருந்து தனித்தனியாக பிரிந்து இருந்த இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன் மனைவி போல லிவ்விங் டுகதரில் வாழ்ந்து வந்தனர். இன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையைில் பெண்ணுடன் வசித்து வந்த ஆண் அந்த பெண்ணை நிர்வாணமாக தெருவில் துரத்தி விட்டார். பெண் நிர்வாணமாக இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணுக்கு உடை கொடுத்து அணிந்து கொள்ள செய்தனர். பின்னர், இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து லிவ்விங் டுகதரில் ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.