பெரம்பலூர்: புதிய பஸ் ஸ்டாண்ட்டில், பாஸ்ட் ஃபுட் கடைகளில் புகைப் போக்கிகள் அமைக்க பயணிகள் கோரிக்கை!

schedule
2025-09-07 | 13:23h
update
2025-09-07 | 13:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Passengers demand smoke Chimney to be installed at the new bus stand and fast food Hotels!

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் சென்னை, திருச்சி, மதுரை, கும்பகோணம், அரியலூர், தஞ்சாவூர், சேலம், நாமக்கல், கரூர், துறையூர், ஆத்தூர், கடலூர், வேலூர், திருப்பதி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 500 பஸ்களில் லட்சக்கணக்கானோர் வந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

பேருந்து நிலையத்திற்குள் கிழக்குப் பகுதியில் இயங்கும் பாஸ்ட் ஃபுட் ஹோட்டல்களில் புகை போக்கிகள் இல்லாமல் பாஸ்புட் கடைகளில் உணவு தயாரிப்பதால் வெளியாகும் எண்ணெய் மற்றும் நச்சு வாயுக்கள் பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளையும் குழந்தைகளையும் அதிகமாக பாதிக்கிறது. இதனால், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள் ஏற்படும். நகராட்சி நிர்வாகம், பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளும், பேருந்துகளும் செல்ல வசதி செய்வதோடு, சுவாச நோய்களிலிருந்து தப்பிக்க பாஸ்ட்புட் கடைகளில் புகைபோக்கிகள் பொருத்தவும், உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 02:37:46
Privacy-Data & cookie usage: