Perambalur: Path dispute; family stages a sit-in protest at the SP’s office demanding the implementation of a court order.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் அதே ஊரில் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் நாசர் என்பவர் ஷாஜகான் வீட்டுக்குச் சென்று வரும் பாதையை ஆக்கிரமித்து இந்த பாதையை நீங்கள் பயன்படுத்தக் கூடாது என ஜேசிபி எந்திரம் மூலம் பாதையை அகற்றி உள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். நீதிமன்றத்தில் பொது பாதை இருந்தால் அதை ஆக்கிரமிப்பை அகற்றி தர போலீசாருக்கு உத்தரவிட்டும் மங்களமேடு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஷாஜகான் இன்று தனது மனைவி நஜிமுனிசா, குழந்தைகள் உள்பட குடும்பத்தினருடன் 10 பேர் பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆபீஷ் முன்பு தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவரை போலீஸ் எஸ்.பி-யிடம் அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் எந்தவித நடவடிக்கை எடுக்காத மங்களமேடு போலீசார் குறித்து தெரிவித்தனர். மேலும், நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற கோரியும் தனது வீட்டிற்கு, செல்லும் பாதையை ஜேசிபி கொண்டு பாதையை அகற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் தெரிவித்தனர். இதனை விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மாவட்ட எஸ்பி ஆபீசில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.